இளம் முஸ்லீம் பெண்கள்,சிறுமிகள் உள்ளாடைக்குள் ஸ்பூன் வைப்பது ஏன்..?

இளம் முஸ்லீம் பெண்கள்,சிறுமிகள் உள்ளாடைக்குள் ஸ்பூன் வைப்பது ஏன்..?
X

கோப்பு படம் 

இந்திலாந்தில் இளம் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் உள்ளாடைக்குள் ஒரு ஸ்பூன் வைத்துக் கொள்கிறார்கள். அது ஏன் தெரியுமா..?

இங்கிலாந்தில், இந்திய மற்றும் பாகிஸ்தானிய முஸ்லீம் மக்கள் ஒப்பீட்டளவில் அதிக சதவீதத்தினர் வாழ்கின்றனர். அவர்களில் பல இளம் பெண்கள், சிறுமிகள் கட்டாயத் திருமணத்திற்காக வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவதாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே உள்ளது.

அதனால் இங்கிலாந்தில் வாழும் இந்திய மற்றும் பாகிஸ்தானிய முஸ்லீம் இளம் பெண்களும் சிறுமிகளும் பயந்து வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. 2013ம் ஆண்டில் மட்டும் 1,500 பெண்களுக்கு கட்டாயத் திருமணம் செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகி விசாரிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் பாரம்பரிய முஸ்லீம் நாடுகளில் ஒன்றாகும். இங்கிலாந்தில் வசிப்பவர்களில் வங்கதேச முஸ்லீம் 11%, இந்தியா - 8%. மீதமுள்ளவர்கள் ஆப்கானிஸ்தான், சோமாலியா, துருக்கி மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இப்படி பாதிக்கப்பட்டவர்களில் 2 வயது சின்னஞ்சிறு பெண்குழந்தையும் அடங்கும்.

நூதன ஐடியா

மனித உரிமைகள் அமைப்பான கர்மா நிர்வாணா இந்தப் பிரச்சனையை தீவிரமாகக் கையாளத் தொடங்கியது. கட்டாயத் திருமணத்திலிருந்து இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதுகாக்க அவர்கள் மிகவும் எளிமையான தந்திரம் ஒன்றை பின்பற்ற அறிவுரை வழங்கினர். ஒரு ஸ்பூன் அல்லது மற்ற ஏதாவது உலோகப் பொருளை உள்ளாடைகளில் மறைத்து வைத்துக்கொள்வது. இதை விமான நிலையத்தில் உள்ள மெட்டல் டிடெக்டர்கள் கண்டுபிடித்து விடும். இவ்வாறு கண்டுபிடிக்கும்பட்சத்தில் இந்த பிரச்னையை சரிசெய்ய முடியும்.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனை குறித்து தகவல் தரப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு இளம் பாகிஸ்தானியப் பெண் அல்லது ஒரு இந்து பெண்ணை அடிமையாக அழைத்துச் செல்லும் அதிக ஆபத்து உள்ளது.

குறிப்பாக கோடை விடுமுறை காலங்களில் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பள்ளி ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவர்களாகவும், சமூக பாதுகாப்புக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருப்பார்கள். அந்த காலகட்டத்தில் கட்டாயத் திருமணங்கள் நடத்துவதற்கு திட்டமிடுவார்கள். இந்த கோடை விடுமுறை காலங்களில்தான் அதிகமான கட்டாயத் திருமணங்கள் நடக்கும் செய்திகளை இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் பெறுகிறது. அதிலும் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 16 வயதுக்குட்பட்டவர்கள்.


கர்மா நிர்வாணா அமைப்பின் நிறுவனர் ஜஸ்விந்தர் சங்கர், 16 வயதில் கட்டாயத் திருமணம் செய்ய மறுத்த இளம் சிறுமி பல ஆண்டுகளாக கட்டாயத் திருமணத்துக்கு எதிராகப் போராடி வருகிறார். இந்தியாவில் அந்நியர் ஒருவரை திருமணம் செய்ய அந்த சிறுமி மறுத்துவிட்டார். அதனால்தான் சீக்கிய குடும்பம் அந்த சிறுமியைத் துறந்தது. அவரது 27 வயதில், 1993ம் ஆண்டில் அவர் கர்மா நிர்வாணா என்ற அமைப்பை நிறுவினார்.

அவரது இந்த அமைப்பின் மூலமாக பல சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு இளம் சிறுமியை அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் கட்டயத் திருமணத்துக்காக நாட்டைவிட்டு கொண்டுசெல்வதற்காக போகும்போது விமான நிலையங்களில் அந்த சிறுமிகள் வைத்திருக்கும் ஸ்பூனை மெட்டல் டிடெக்டர் கருவிகள் கண்டுபிடித்துவிடும்.

அப்போது ஆஹா..இவர்கள் கட்டயத் திருமணத்துக்கு கடத்தப்படும் சிறுமிகள் என்பதை பணியாளர்கள் கண்டுபிடித்து காவல்துறைக்கு அறிவித்து விடுவார்கள். சிறுமிகள் சில நேரங்களில் பெற்றோரின் பேச்சை தட்டிக்கழிக்க முடியாமல் இருப்பார்கள். அதனால் ஏற்படும் அச்சத்தால் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். ஒன்று பெற்றோர் துன்புறுத்தலாம். அல்லது பெற்றோரை எதிர்த்து பேச துணிவில்லாமல் அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.

அவ்வாறு மெட்டல் டிடெக்டர் கண்டுபிடித்ததும் விமான நிலைய ஊழியர் ஒருவர் சிறுமியை அணுகிப் பேசி அவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

மான்செஸ்டர் நகர சபையில் பணியாற்றிய சமீம் அலிக்கும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. 13 வயதில் பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், சில மாதங்களுக்குப் பிறகு, கர்ப்பமாக இருந்த சமீம் இங்கிலாந்துக்குத் திரும்பினார்.

பாதிக்கப்படும் பல பெண்களில் ஒரு சிலர் மட்டுமே மீட்கப்படுகிறார்கள். பொதுவாக பெற்றோர் உறவினர்களின் திருமணத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அழைத்துச் செல்கிறார்கள். கடைசியில் அந்த பயணம் அவர்களுக்கான திருமணப் பயணமாக முடிந்துவிடும். பல பெண்களை கர்ப்பம் தரிக்கும் வரை திருப்பி அனுப்பப்படுவதில்லை.

அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் பாதிக்கப்படும் எண்ணிக்கையில் ஒரு சிறிதளவு மட்டுமே வெளியே தெரிய வருகிறது என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. பல குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு எதிராக புகார் அளிக்கவோ அல்லது அவர்களுக்கு எதிராகவோ செயல்பட விரும்பாததால் பல கட்டாயத் திருமணங்கள் வெளியே தெரியாமல் உள்ளன.


பள்ளிகளில் விழிப்புணர்வு

இன்று, இங்கிலாந்தில் உள்ள சில பள்ளிகளில் கட்டாயத் திருமணத்திலிருந்து சிறுமிகளை பாதுகாக்க சிறப்புப் பாடங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு கட்டாயத் திருமணத்தின் நடைமுறைகளின் அனைத்து நுணுக்கங்களையும் பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும் உலோக கரண்டிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுளளது. பத்தாண்டுகளில் அவர்கள் சுமார் 70 ஆயிரம் அழைப்புகளைப் பெற்றதாக "கர்மா நிர்வாணா" தெரிவிக்கிறது.

2014 ஆம் ஆண்டு முதல், கட்டாயத் திருமணத்தை தடைசெய்யும் குற்றவியல் சட்டம் இங்கிலாந்தில் அமலில் உள்ளது. குழந்தைகளை கட்டாயத் திருமணத்துக்கு வற்புறுத்தும் பெற்றோருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

2018 ஆம் ஆண்டில், பர்மிங்காமில் இருந்து ஒரு பெண் தனது 17 வயது மகளை ஏமாற்றி திருமணம் செய்வதற்காக பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்த சிறுமியை விட 16 வயது மூத்த ஒருவருக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தது அம்பலமானது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!