இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்பு

இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்பு
X
சிறுத்தையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரக வனப்பணியாளர்கள் நேற்று மாலை ரோந்து சென்றுள்ளனர். அப்போது போட்டுக்கடவு சராகப்பகுதி, பசுங்கனிமேடு, வனப்பகுதிக்குள் துர்நாற்றம் வீசியதை அறிந்து அங்கு சென்று பார்த்தனர். அப்பகுதியில் ஒரு ஆண் சிறுத்தை இறந்த நிலையில் காணப்பட்டது. சிறுத்தையின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர், உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் வன கால்நடை அலுவலரால் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!