வாட்ஸ்ஆப் பார்க்கணுமா..? மொபைலை மாத்துங்க..!
mobile addict-வாட்ஸ்ஆப், முகநூல், இன்ஸ்டாகிராம் (கோப்பு படம்)
வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் என பல மெசேஜிங் செயலிகள் வந்த போது, ஒட்டுமொத்த உலகமும் பதறியது. இதனை பயன்படுத்த வேண்டாம். அடிமையாகப்போகிறீர்கள் என எச்சரிக்காத நபர்களே இல்லை. அத்தனை எச்சரிக்கைகளையும் மீறி மக்கள் வாழ்க்கையில் மொபைல், டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் ஒட்டுமொத்த உலகையும் அடிமையாக்கி விட்டன.
இப்போது மொபைல் அடிக்ஷன் சிகிச்சை மீட்பு சென்டர்கள் கூட வந்து விட்டன. அந்த அளவு மக்கள் அடிமையாகி விட்டனர். இவ்வளவு அடிமைகளை வைத்துக் கொண்டு பன்னாட்டு கம்பெனிகள் சும்மா இருப்பார்களா? ஒவ்வொன்றுக்கும் பணம் தர வேண்டும் என வசூலிக்கத் தொடங்கி விட்டனர். விரைவில் இ-மெயில் பயன்படுத்தக்கூட பணம் வசூலிப்பார்களாம். இப்ப என்ன சிக்கல் என்கிறீர்களா?
இனி அடிக்கடி மொபைலை மாற்றி ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதோ என்ற சிக்கலான நிலை உலகம் முழுவதும் காணப்படுகிறது. காரணம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப், ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு, ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட இயங்குதளத்தில் பயன்படுத்தப்படுகிறது. பழைய மாடல் போன்களில் வாட்ஸ்ஆப் தனது சேவைகளை படிப்படியாக நிறுத்தி வருகிறது.
அந்த வகையில், 'ஐ.ஓ.எஸ்-12' அல்லது அதற்கு முந்தைய வெர்சன்கள் கொண்ட ஐபோன்கள் மற்றும் 'ஆன்ட்ராய்டு-5' அல்லது அதற்கு முந்தைய வெர்சன்கள் கொண்ட ஆன்ட்ராய்டு போன்களில் இந்தாண்டு இறுதிவரை மட்டுமே வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு இந்த போன்களில் வாட்ஸ்ஆப் செயலி செயல்படாது. ஆப்பிள், சாம்சங், மோட்டோரோலா, ஹவாய், எல்.ஜி, லெனோவா, சோனி ஆகிய நிறுவனங்களை சேர்ந்த 35 மாடல் போன்களில் 2025 ஜனவரி முதல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாதாம். இனிமேல் வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் பயன்படுத்த ஒவ்வொரு டைப் மொபைல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவு உலகம் மொபைலில் முடங்கி கிடக்கிறது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu