திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு அரசு உயர் அதிகாரிகள் வருகை ?

திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு அரசு உயர் அதிகாரிகள் வருகை ?
X

மு.க.ஸ்டாலின் 

திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு அரசு உயர் அதிகாரிகள் வருகை தந்துள்ளதாக தெரிகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டிற்கு அரசு அதிகாரிகள் வருகை தந்த வண்ணம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக கூடுதல் டிஜிபி, ஐ ஏ எஸ் அதிகாரிகள் கார்த்திகேயன், அப்துல் மிஸ்ரா, சந்திரமோகன் ஆகியோர் ஸ்டாலினை சந்திப்பதற்காக வருகை தந்துள்ளதாக தெரிகிறது.

தமிழக தேர்தலில் திமுக வெற்றிப் பாதையை நோக்கி செல்வதால் அடுத்து ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. அதனால், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஸ்டாலினை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே திமுக அதிக எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராதன், கூடுதல் டிஜிபி சங்கர் ஜீவால், வீட்டூ வசதி வாரிய செயலாளர் கார்த்திகேயன், சந்திரமோகன் ஐஏஎஸ், டிஜிபி கந்தசாமி, வருண்குமார் ஐஏஎஸ், அப்பல்லோ குழும நிர்வாகி பிரீத்தா ரெட்டி உள்பட பலர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!