மதுரை அருகே இளம் பெண் தற்கொலை: இரண்டாவது கணவர், மாமனார் கைது

மதுரை அருகே இளம் பெண் தற்கொலை: இரண்டாவது கணவர், மாமனார் கைது
X

பைல் படம்.

120 பவுன் நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு அண்ணியை 2 திருமணம் செய்து வரதட்சணைக்கு கொடுமைபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவரது மகள் மாளவிகாவுக்கும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகவிக்குட்பட்ட கே.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த தலையாரி பாண்டி என்பவரது மூத்த மகன் பிரபாகரன் என்பவருக்கு, கடந்த 2019-ம் ஆண்டில் இருவீட்டாரும் பேசி தடபுடலாக திருமணம் செய்து வைத்தனர்.

இத்திருமணத்திற்காக மணபெண்ணிற்கு வரதட்சணையாக 120 சவரன் தங்க நகையும், 10 லட்ச ரூபாய் ரொக்க பணமாகவும், சீர்வரிசை பொருட்களாகவும் வழங்கி, பெண்வீட்டார் மாப்பிள்ளைக்கு சீதனமாக வழங்கியுள்ளனர். திருமணமான 10 மாதங்களில் மணமகன் பிரபாகரன் உடல்நல குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார். இதனால், கணவரை இழந்த இளம்பெண் மாளவிகா, மதுரை காளவாசலில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு திருப்பி வந்து விட்டார்.

வரதட்சணையாக வழங்கப்பட்ட 120 சவரன் தங்க நகைகள் மற்றும், சீர்வரிசை பொருட்களை பெண் வீட்டார் திருப்பி மணமகன் வீட்டாரிடம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரதட்சணையாக கொடுத்த தங்கநகை, பணத்தை கைப்பற்ற நினைத்த இறந்த பிரபாகரனின் தம்பி பிரகாஷ் திட்டம் தீட்டி, கணவரை இழந்த நிலையில் உள்ள கல்லூரி மாணவியான மாளவிகாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட பிரகாஷ், நைசாக பேசி நான் உன்னை திருமணம் செய்து கொண்டு நன்றாக உன்னை பார்த்து கொள்கிறேன் என்று காதல் வசனம் பேசி 5 மாத காலமாக மாளவிகாவை காதல் வயப்படுத்தியுள்ளார். இதனை நம்பிய, மாளவிகா திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.

பின்னர், பிரகாஷ் தனது தாய்-தந்தையர் உறவினர் உதவியுடன் மாளவிகாவை காரில் அழைத்து சென்று மாளவிகாவின் பெற்றோருக்கு தெரியாமல், அவசர அவசரமாக கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் கோபத்தில் மணமகன் வீட்டாரிடம் சண்டையிட்டு தனது மகளிடம் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்த மறுநாள் முதலே மாளவிகாவை வரதட்சணை நகை, பணம் வேண்டும் எனக் கேட்டு, மணமகன் பிரகாஷ், தந்தை பாண்டி, பிரகாஷின் தாய் என மூவரும் தொந்தரவு செய்துள்ளனர். இதனைக் கேள்விபட்ட மாளவிகாவின் பெற்றோர் மீண்டும் 70 சவரன் தங்க நகைகள், மணமகனுக்கு 5 சவரன் என 75 சவரன் தங்க நகை மற்றும் பணம் ரூ.5 லட்சம் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கூடுதலாக தங்க நகைகள் மற்றும் பணம் வேண்டும் என மாளவிகாவை பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தொந்தரவு செய்து கொடுமைபடுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த மாளவிகா வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தாமதமாக தெரிவிக்கப்பட்டது.

பதறிய பெண்ணின் பெற்றோர் இறந்த மாளவிகாவின் சாவில் மர்மம் உள்ளது. போலீசார் விசாரணை செய்ய வேண்டும், வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் எனது மகள் இறந்துவிட்டார். எனவே, மருகன், மாமனார், மாமியார் மீது செக்காணூரணி காவல்நிலையத்தில் மாளவிகா தந்தை கருப்பையா புகாரளித்தார். இந்த நிலையில், திருமணமான சில நாட்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஒ.விசாரணை நடைபெற்றது. ஆர்.டி.ஒ.விசாரணை அறிக்கையயில் வரதட்சணை கொடுமையால்தான் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், இரண்டாவது கணவர் பிரகாஷ், மாமனார் பாண்டி, மாமியார் உள்பட 3 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்புக்கப்பட்டது. உடனே, மணமகன் வீட்டார் குடும்பத்தோடு தலைமறைவாகினர். செக்காணூரணி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மாப்பிள்ளை பிரகாஷ், தந்தை பாண்டி ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

தலைமறைவாக உள்ள மாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். முதல் கணவர் இறந்த நிலையில், அண்ணி என்றும் பாராமல், வரதட்சணைக்கு ஆசைப்பட்டு பிரகாஷ் நடத்திய காதல் நாடகத்தில் நம்பி இளம் பெண் மாளவிகா இரண்டாவது திருமணம் செய்த நிலையில், மாளவிகாவிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்