விசைத்தறி மின்னணு பலகை பொருத்த 50 % மானியம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்

விசைத்தறி மின்னணு பலகை பொருத்த 50 % மானியம்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்
X

(பைல்படம்)

விருதுநகர் மாவட்டத்தில், சாதாரண விசைத்தறிகளில், 50 சதவீத மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில், சாதாரண விசைத்தறிகளில், 50 சதவீத மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில், சாதாரண விசைத்தறிகள் வைத்திருப்பவர்கள் 50 சதவிகித மானியத்துடன் மின்னணு பலகை பொருத்துவதற்கு விண்ணப்பங்கள் வழங்கலாம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள தகவல்: தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, தமிழ்நாட்டிலுள்ள சாதாரண விசைத்தறிகள் உற்பத்தி திறனை அதிகப்படுத்து வதற்காக, கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாரா விசைத் தறிகளுக்கு 50 சதவிகித மானியத்துடன் கூடிய மின்னனு பலகை (Electronic Panel Board) வழங்கப்பட உள்ளது. இதில் சேர்ந்து பயனடைய விருப்பமுள்ள விசைத்தறியாளர்கள், விருதுநகர் மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04562 - 252708 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!