திருவில்லிபத்தூர் ஆண்டாள் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

திருவில்லிபத்தூர் ஆண்டாள் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்
X

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில்  சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்றிரவு சுவாமி தரிசனம் செய்தார்

விருதுநகர் மாவட்டம் , திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்றிரவு சுவாமி தரிசனம் செய்தார். தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்திருந்தார். தென்காசி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் காரில், ராஜபாளையம் வழியாக மதுரைக்கு சென்றார்.

முதல்வருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலின், திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். துர்கா ஸ்டாலினுக்கு ,திருவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், கோயில் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். ஸ்ரீரெங்கமன்னார் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலினுக்கு ஆண்டாள் சூடிய மாலை, கிளி, சுவாமி படம் மற்றும் பிரசாதங்களை பட்டர்கள் வழங்கினர். பின்னர் ஆண்டாள் அவதரித்த நந்தவனம், பெரியபெருமாள் சந்நிதி ஆகியவற்றில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் சிறப்புகள் பராம்பரியம் குறித்து கோயில் பட்டர்களிடம் ஆர்வமுடம் கேட்டறிந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது. இந்தக் கோவிலானது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் வடபத்ரசாயி பெருமாள் கோவில் உள்ளது. இவருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடி கொடுத்தாள், என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றது. இங்கு அமைந்துள்ள கோபுரம் 196 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது.

தமிழக அரசின் ராஜகோபுரத்தில் இந்த முத்திரை இடம்பெற்றுள்ளது, இதற்கான தனிச்சிறப்பு. கோவிலின் இரண்டாம் பகுதி ஆண்டாள் சந்நிதி. இங்கு உள்ள கல்வெட்டுகளில் 'சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில்' என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலில் உற்சவர் ஆண்டாளுக்கு சுத்தப்படும் மாலையில் கிளி அணிவிக்கப்படுகிறது. இந்தக் கிளியை உருவாக்குவதற்கு ஒரு வம்சாவழியினர் உள்ளனர். மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் இவற்றைக்கொண்டு தினம்தோறும் ஆண்டாளுக்கு கிளியை செய்துவருகிறார்கள். மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்த்ததாக கூறப்படும் கண்ணாடி கிணறு இன்று உண்டியல் ஆக பயன்படுத்தப்படுகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!