காரியாபட்டி பகுதிகளில் கிராம சேவை மையங்கள் தொடக்கம்

காரியாபட்டி பகுதிகளில் கிராம சேவை மையங்கள் தொடக்கம்
X

தொடக்க விழாவில் கலந்து கொண்ட பாரத ஸ்டேட் வங்கி காரியாபட்டி கிளை மேலாளர், பஞ்சாயத்து தலைவர்கள்,மற்றும் தானம் அறக்கட்டளை பணியாளர்கள் 

பாரத ஸ்டேட் வங்கி பவுண்டேசன் மற்றும் தானம் அறக்கட்டளை சார்பாக இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது

காரியாபட்டி ஒன்றியத்தில் 5 கிராமங்களில் கிராம சேவா கேந்திரா மையங்கள் பாரத ஸ்டேட் வங்கி பவுண்டேசன் மற்றும் தானம் அறக்கட்டளை சார்பாக தொடங்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி பவுண்டேசன் சார்பாக விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கிராம சேவா கேந்திரா மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் பின் தங்கிய கிராமங்களை சுயசார்புள்ள கிராமப்புறங்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் 2017 ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி. அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன்மூலம் கிராமங்களை தத்து எடுத்து அங்கு மக்களுக்கு சேவையாற்றுவதற்காக கிராம சேவா கேந்திரா மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது, 130 கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.. இந்திட்டத்தில், மூலமாக கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் கிராம முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறது விருதுநகர் மாவட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கி பவுண்டேசன் மற்றும் தானம் அறக்கட்டளை இணைந்து காரியாபட்டியில் உள்ள சூரனூர், தேனூர், சித்தனேந்தல், எஸ்.மறைக்குளம், ஏ. தொட்டியங்குளம் ஆகிய 5 கிராமங்களைத் தத்தெடுத்து சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை செயல்படுத்தி வருகிறது.

திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கிராம சேவா கேந்திரா மையங்கள் தொட்டியங்குளம், சூரனூர் மற்றும் சித்தனேந்தல் ஆகிய 3 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த 5 கிராமங்களிலும் தலா 1 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் ,சுமார் 1200 குடும்பங்கள் பங்கேற்றனர்.

இதன் தொடக்க விழாவுக்கு, பாரத ஸ்டேட் வங்கி காரியாபட்டி கிளை மேலாளர், பஞ்சாயத்து தலைவர்கள்,கிராம பொது மக்கள் மற்றும் தானம் அறக்கட்டளை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil