சிவகாசியில் விறுவிறுப்பாக பட்டாசு விற்பனை:
கோப்புப்படம்
உலகில் பட்டாசு வர்த்தகத்தில் முதலிடம் பிடிக்கும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது, 'குட்டி ஜப்பான்' என்றழைக்கப்படும் சிவகாசி. இங்கு, 90 சதவிகித பட்டாசுகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. நாடு முழுமைக்கும் இங்கிருந்தே பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும், இந்தப் பகுதி மக்கள் பட்டாசுத் தொழிலைச் சார்ந்திருக்கின்றனர். இங்கு, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கேற்றபடி, சிறிதும் பெரிதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. குறிப்பாக, 850-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் பெற்றவையாகவும், 700-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் இல்லாத ஆலைகளாகவும் உள்ளன.
தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, பிரபலமான ஹாலிவுட் படங்களின் பெயர்களுடனும், பாலிவுட் படங்களின் பெயர்களுடனும் நவீனரக வானவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறிய ரக வானவெடிகள் சுமார் 30 அடி உயரம் வரை பாய்ந்து சென்று வண்ணமயமாக வெடித்துச் சிதறும். பெரியளவிலான வானவெடிகள் 200 அடி முதல், 300அடி உயரத்திற்குச் பறந்து சென்று வானில் வெடித்து வர்ணஜாலம் காட்டுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மேலும் வானவெடிகளில் சிங்கிள் ஷாட், டபுள் ஷாட், விசிலிங் ஷாட், கிராக்களிங் ஷாட் என நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் வானவெடிகள் தயாராகியுள்ளன. சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில், புதிய வரவுகளான நவீனரக வெடிகளை பட்டாசு பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu