பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளரின் மகன் கைது

பட்டாசு ஆலை வெடி விபத்தில்  ஆலை உரிமையாளரின் மகன் கைது
X
பட்டாசு ஆலையின் உரிமையாளரின் மகன் சிதம்பரத்தை போலீஸார் கைது செய்தனர்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து வழக்கில் ஆலை உரிமையாளரின் மகனை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சிவகாமிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (57). இவர் சாத்தூர் அருகேயுள்ள கத்தாளம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, சோலைவிக்னேஷ் (26) என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். பட்டாசு ஆலை விபத்து குறித்து அம்மாபட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலை உரிமையாளர் பெரியகருப்பன், அவரது மகன்கள் ராமச்சந்திரன் (34), சிதம்பரம் (31), மணிகண்டன் (28) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் இவர்களை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் சிதம்பரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்