மகனின் மருத்துவ செலவுக்கு பணம் தராததால் தாய் தற்கொலை

மகனின் மருத்துவ செலவுக்கு பணம் தராததால் தாய் தற்கொலை
X

பைல் படம்.

Suicide News - மகனின் மருத்துவ செலவுக்கு பணம் கொடுக்காததால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suicide News -விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களின் மூத்த மகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காயத்ரி தனது மகனை பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றும் நோய் குணமாகவில்லை. தொடர்ந்து மருத்துவச் செலவுகளுக்காக காயத்ரி அருகில் இருந்தவர்களிடம் பணம் கடன் வாங்கியிருக்கிறார். மகனின் மருத்துவ செலவிற்கு கணவன் பணம் தர மறுத்ததால் மன வேதனையில் இருந்த காயத்ரி, மண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயத்ரி, சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாத்தூர் நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story