சாத்தூர் - சிவகாசி பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

சாத்தூர் - சிவகாசி பகுதிகளில் பலத்த மழை:  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்
X

சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் - சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது

சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பரவலாக பலத்த மழை பெய்தது. சாத்தூர், நென்மேனி, கோஸ்குண்டு, ஆர்ஆர்.நகர், கோட்டூர், வச்சக்காரப்பட்டி, ஆமத்தூர், மத்தியசேனை, குமாரலிங்கபுரம், கன்னிசேரி, முத்துலிங்காபுரம், திருத்தங்கல், பாரைப்பட்டி, மீனம்பட்டி, நாரணாபுரம், சித்துராஜபுரம், பேர்நாயக்கன்பட்டி, மடத்துப்பட்டி, சல்வார்பட்டி, படந்தால், முக்குராந்தல், வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தின், பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்