சிவகாசி அருகே ஆலைத் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை

சிவகாசி அருகே ஆலைத் தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை
X

 சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் பார்வையிட்டார்.

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி கழுத்தையறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 திருநங்கைகளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பேருந்து நிலையம் அருகே, நகராட்சி இடுகாடு எனும் பிள்ளைகுழி உள்ளது. இந்த பகுதியில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, சிவகாசி நகர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் திருத்தங்கல், தேவராஜ் காலனி பகுதியைச் சேர்ந்த டேவிட் (38) என்பது தெரியவந்தது. கொலையான டேவிட்டிற்கு சுபா என்ற மனைவியும், 10 வயது மகளும் உள்ளனர். பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த டேவிட், சிவகாசி இடுகாட்டிற்கு ஏன் வந்தார், அவரை யார் கழுத்தையறுத்து கொலை செய்தனர், பணத் தகராறில் கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் பார்வையிட்டார். பட்டாசு தொழிலாளி படுகொலை சம்பவத்தில் ஆதாரங்களை சேகரிக்க தடயவிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். விருதுநகரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

இந்த படுகொலை சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் 2 திருநங்கைகளை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு தொழிலாளி ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரம் மார்க்கெட்டில் பருத்திக்கு உச்ச விலை!..ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம்!