'எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என் கையில்' உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி என்  கையில்     உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
X
எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை என் கையில் வைத்திருக்கிறேன் என்று சாத்தூர் பிரசாரத்தில் உதயநிதி அதிமுக அரசை கிண்டல் செய்தார்.

மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை, கையோடு எடுத்து வந்திருக்கிறேன் என சாத்தூர் பிரசாரத்தில் உதயநிதி கிண்டல் செய்தார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரகுராமனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பேசும்போது, ' மதுரையில் பிரதமர் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை, கையோடு எடுத்து வந்திருக்கிறேன் என கிண்டல் செய்தார். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை கட்டுமான பணிகள் துவங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக அப்படி கிண்டல் செய்தார். உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை பொதுமக்களிடம் காண்பித்து பிரசாரம் மேற்கொண்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்