புலவாய்கரை கண்மாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

புலவாய்கரை கண்மாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
X

களத்தூர் கண்மாயில் இருந்து - புல்வாய்க்கரைக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட  விவசாயிகள்.

புலவாய்கரை கண்மாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுமென்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம் புல்வாய்க்கரை கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு, போதுமான தண்ணீர் வராததால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வைகை நதியில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, நரிக்குடி ஒன்றிய பகுதியில் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், களத்தூர் கண்மாயில் இருந்து - புல்வாய்க்கரைக்கு தண்ணீர் கொண்டுவர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய், அப்பகுதி விவசாயிகள், நேரில் சென்று கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்