அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள் புலம்பல்

அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள் புலம்பல்
X

நலத்திட்ட உதவி டோக்கன் வாங்க காத்திருந்த முதியவர்கள்

ராஜபாளையத்தில் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்

ராஜ்பாளையம்கிழக்கு ஒன்றியம் சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.

கூட்டத்தில், கலந்து கொண்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என்று கூட்டத்தினை ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகள் தெரிவித்திருந்த நிலையில், கூட்டம் முடிந்த பிறகும் டோக்கன் வழங்கப்படாததால், பல முதியவர்கள் மன வேதனையில் அமர்ந்திருந்து வேதனையை வெளிப்படுத்தினர்.

இந்த பகுதியில், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய சார்பில், அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இதில், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுவதாக அறிவித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமைக் கழக பேச்சாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னர்.

தலைமைக் கழக பேச்சாளர், கட்சி குறித்து சிறப்புரை ஆற்றும் பொழுது டோக்கன் வழங்கப்படும் என அழைத்து வரப்பட்ட பொதுமக்கள் அயராது தூக்கத்திலும் செல்போனையும் நோண்டியபடி இருந்தனர்.

மாலை ஆறு மணி முதல் அழைத்து வரப்பட்டு பொதுக்கூட்டம் 9 மணி வரை தொடர்ந்து நடைபெற்றதால், வேஷ்டி சேலை வாங்க வந்தவர்கள் கூட பொறுமை பத்தாது அவரவர் வீட்டிற்கு எழுந்து சென்றனர்.

மேலும், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக முதியோர்களை அழைத்து வந்துள்ளார் .

கூட்டம் முடிந்தவுடன், மேடையில் வைத்து 10 பேருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கிவிட்டு, மற்றவர்களை காத்திருக்குமாறு பொறுப்பாளர் கூறி உள்ளார்.

இதனால் கூட்டத்திற்க்கு வந்து இருந்த முதியவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில், பொறுமை இழந்த பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகவும் காத்திருந்தும் நலத்திட்ட உதவிகள் வழங்காமல், இழுத்தடிக்கப்படுவதை கண்டு ஆத்திரமடைந்தனர்.

கட்சி பொறுப்பாளர்களை பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் திட்டி தீர்த்தனர். முதியோர்களை காக்க வைப்பது நல்லதல்ல என சில அதிமுக கட்சியினரை திட்டி விட்டு சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்