ராஜபாளையத்தில் ஏ.டி.எம். மிஷினை உடைத்து திருட முயற்சி: போலீஸார் விசாரணை
ராஜபாளையம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்
ATM Robbery- ராஜபாளையம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி சாலை, அழகை நகர் பகுதியில் தேசிய வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் செயல்பட்டு வருகிறது. ஊருக்கு வெளிப்புறம் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளி கிடையாது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் சென்றவர்கள் ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து உடனடியாக ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம். இயந்திரம் இருந்த அறையில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏ.டி.எம் இயந்திரத்தில் 5 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாகவும், பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முடியாததால், அதிலிருந்த பணம் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியதாகவும் அதிகாரிகள் கூறினர். அங்கு இருந்த கண்காணிப்பு கேமிரா மற்றும் அந்தப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து, ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu