காரியாபட்டியில் உலக மண்வள தின விழிப்புணர்வு கூட்டம்

காரியாபட்டியில் உலக மண்வள தின விழிப்புணர்வு கூட்டம்
X

காரியாபட்டி அருகே உலக மண்வள தினவிழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வேளாண்மை துறை சார்பாக உலக மண்வள தின விழிப்புணர்வு கூட்டம் பி.புதுப்பட்டியில் நடைபெற்றது.

காரியாபட்டி அருகே உலக மண்வள தினவிழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வேளாண்மை துறை சார்பாக, உலக மண்வள தின விழிப்புணர்வு கூட்டம் பி.புதுப்பட்டியில் நடைபெற்றது.

கூட்டத்திற் மாவட்டக் கவுன்சிலர் தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தார். வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் ராஜேந்திரன், வேளாண் அலுவலர் முருகேசன் ஆகியோர் மண்வள பாதுகாப்பு, மண் பரிசோதனையின் பயன்பாடுகள், புதிய தொழில் நுட்பங்கள் குறித்து பேசினர்.

கூட்டத்தில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேஸ், உதவி மேலாளர் வீரபாண்டி, உதவி வேளாண் அலுவலர்கள் அனிதா, பாண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!