அருப்புக்கோட்டையில் தன்னார்வலர்களுக்கான பயிலரங்கம்

அருப்புக்கோட்டையில்  தன்னார்வலர்களுக்கான பயிலரங்கம்
X

அருப்புக்கோட்டையில் தன்னார்வலர்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

விருதுநகர், இராமநாதபுரம் மாவட்ட அளவிலான தன்னார்வகளுக்கான கருத்தரங்கம் அருப்புக் கோட்டையில் நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் தன்னார்வலர்களுக்கான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

விருதுநகர், இராமநாதபுரம் மாவட்ட அளவிலான தன்னார்வ களுக்கான கருத்தரங்கம் அருப்புககோட்டையில் நடைபெற்றது. ஸ்பீச், வான் முகில், தமிழ்நாடு அலையன்ஸ், பேட் நிறுவனங்கள் சார்பாக, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் தன்னார்வர்களுக்கான,கருத்தரங்கம் நடைபெற்றது.

அருப்புக்கோட்டை சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசினார். மேலும், சிறந்த தன்னார்வ தொண்டர்களுக்கு நீதிபதி விருதுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில், குழந்தை கள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள், குழந்தை திருமணத்தை தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, நூற்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மத்திய மாநில அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் கங்கா, மாவட்ட தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வேல்முருகன் மற்றும் பொது சேவை மைய மாவட்ட மேலாளர் முத்துக்குமார் . தமிழ்நாடு அலையன்ஸ் நிறுவனர் பாலமுருகன்

திட்ட ஆலோசகர் திரிபுரசுந்தரி, ஒருங்கிணைப் பாளர் சிபிஜா .ஸ்பீச் நிறுவன திட்ட இயக்குனர் பொன்னமுதன் , நிதி இயக்குனர் செல்வம் , மக்கள் தொடர்பாளர் பிச்சை, கள அலுவலர் சுரேந்தர், பேடு நிறுவன இயக்குநர் மன்னர்மன்னன் வழங்கினார். டி.ஆர்.ஆர்.எம். இயக்குனர் கருப்பசாமி நன்றியுரை கூறினார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!