15 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்க்கு வந்த தண்ணீர்: விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு

15 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய்க்கு வந்த தண்ணீர்: விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு
X

15 ஆண்டுகளுக்கு பிறகு தோப்பூர் கண்மாய்க்கு தண்ணீர் வந்ததை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

காரியாபட்டி அருகே எஸ்.தோப்பூர் கிராம கண்மாய்க்கு கொக்குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரிக்கை விடுத்தனர்

15 ஆண்டுகளுக்கு பிறகு தோப்பூர் கண்மாய்க்கு தண்ணீர் வந்ததை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

மதுரை மாவட்டத்தில் வைகை தண்ணீர் நிரம்பி வருவதால், மதுரை - விருதுநகர் - சிவகங்கை இராமநாதபுரம் கண்மாய்களுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் நிலையூர் கால்வாய் மூலமாகவும், நரிக்குடி ஒன்றியப் பகுதிக்கு கிருதுமால் நதிமூலமாக தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

காரியாபட்டி அருகே எஸ்.தோப்பூர் கிராம கண்மாய் பகுதிக்கு மதுரை மாவட்டம் கொக்குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோப்பூர் கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்தனர். தற்போது, கல்லுப் பட்டி அருகே மடை திறக்கப்பட்டதும், 15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வருகை தந்தது. ஒன்றியக்கவுன்சிலர் தோப்பூர் முருகன் மற்றும் விவசாயிகள் கால்வாயில் மலர்தூவி வரவேற்ற்னர்.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!