/* */

காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு:

மதுரை மாவட்டம். நிலையூர் கால்வாயில் கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டது

HIGHLIGHTS

காரியாபட்டி அருகே உள்ள கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் திறப்பு:
X

கம்பிக்குடி  கண்மாய்க்கு தண்ணீர் நிலையூர் கால்வாயிலிருந்து திறக்கப்பட்டது.

மதுரை நிலையூரிலிருந்து, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கம்பிக்குடி கண்மாய்க்கு, தண்ணீர் கொண்டு வருவதற்கான உருவாக்கப்பட்ட திட்டம் தான், நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம். தற்போது, மதுரை மாவட்டம், பெருங்குடி அருகே, தடுப்பணை அமைக்கப்பட்டு, பெருங்குடி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் உள்ளது.

அத்தோடு, நிலையூரிலிருந்து வரும் தண்ணீரை இந்த தடுப்பனையிலிருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, தாலுகா கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் நீடிப்பு திட்டம் மூலமாக கால்வாய் வெட்டப்பட்டது. இங்கிருந்து,

சோளங் குறுணி, எலியார் பத்தி, பாரபத்தி, நல்லூர், ஆணைக்குளம் மாங்குளம், குரண்டி, அரசகுளம் ராயர் பட்டி வழியாக கம்பிக்குடி வந்தடையும்.தற்போது, வைகை அணையிலிருந்து நிலையூர். கால்வாய்க்கு வரும் உபரி நீரை கம்பிக்குடி கால்வாய்க்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி மதுரை மாவட்டத்தில் நடைபெற்றது. காரியாபட்டி தி.மு.க ஒன்றியச் செயலாளர் கண்ணன, துணைச் செயலாளர் குருசாமி, ஒன்றியக் கவுன்சிலர்கள் ஆவியூர் சிதம்பர பாரதி, அரசகுளம் சேகர், ரமேஷ் , நிலையூர் கால்வாய் நீர்பாசன ஆய்வாளர் செந்திக்குமார், உதவியாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஷட்டர்கள் திறந்து வைக்கப்பட்டது.

Updated On: 22 Dec 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!