காரியாபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, காசநோய் கண்டறியும் முகாம்

காரியாபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, காசநோய் கண்டறியும் முகாம்
X

காரியாபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு, காசநோய் கண்டறியும் முகாம்.

முகாமில், டிஜிட்டல் எக்ஸ் ரே மற்றும் சளி பரிசோதனை , இரத்த பரிசோதனைகள் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் வட்டாரம், காரியாபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளார்களுக்கு காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் தலைவர் ஆர்.கே. செந்தில் தலைமையில் தொடக்கி வைக்கப்பட்டது. முகாமில், டிஜிட்டல் எக்ஸ் ரே மற்றும் சளி பரிசோதனை , இரத்த பரிசோதனைகள் நடைபெற்றது..

முகாமில், காசநோய் பற்றியும் நோய் பரவும் விதம், குணமாகும் தன்மை பற்றியும், காசநோயாளி களுக்கு அரசு வழங்கும் உழவர் பாதுகாப்பு அட்டை இருந்தால் ஆறு மாத சிகிச்சை காலத்திற்கு மாதம் 1000 கிடைக்கும் என்றும் ,காசநோய் மாத்திரை சரியாக ஆறு மாதம் சாப்பிட்டால் குணமாகும் என்றும் அவருக்கு காசநோய் துறை சார்பில் மாதம் 500 வீதம் ஆறு மாதத்திற்கு ரூபாய் 3000 கிடைக்கும் என்று தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

இம் முகாமை, காசநோய் பிரிவு மேற்பார்வையாளார்கள் தங்ககுமார், அக்பர் பாதுஷா, மகாலட்சுமி ஆகியேரர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இம் முகாமில், செவிலியர், சுகாதார மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர். செயல் அலுவலர் ஸ்ரீ ரவி குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!