காரியாபட்டியில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

காரியாபட்டியில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
X

காரியாபட்டியில் நடைபெற்ற விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்.

நபார்டு வங்கி மற்றும் சீட்ஸ் நிறுவனம் சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது

ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனங்கள் சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம் மல்லாங்கிணரில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் நிறுவனம்,

நபார்டு வங்கி மற்றும் சீட்ஸ் நிறுவனம் சார்பாக விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமில், மக்காச்சோளம், மிளகாய், பருத்தி, மற்றும் சிறுதானியங் கள் ஒருங்கிணைந்த உர மேலாண்மை, இயற்கை உரமிடுதல். மண்வளம் பாதுகாப்பு, அதிக மகசூல் பெற கையாளவேண்டிய புதிய தொழில்நுட்பங்கள், குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில், ஸ்பிக் மாநில விற்பனை மேலாளர் ஜெயபாலன், மண்டல மேலாளர் அருணாசலம், பாண்டியராஜன் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் சாகுபடிக்கு விதைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!