திருச்சுழி வட்டார குழந்தைகள் பாதுகாப்பு நலக் கூட்டம்
திருச்சுழி வட்டார அளலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம், திருச்சுழி ஒன்றியத் தலைவர் பொண்ணுதம்பி தலைமையில் நடைபெற்றது
திருச்சுழி வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம், திருச்சுழி ஒன்றிய த் தலைவர்பொண்ணுதம்பி தலைமையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மினி முன்னிலை வகித்தார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கார்த்திக் வரவேற்றார். திருச்சுழி ஸ்பீச் நிறுவன நிதி இயக்குநர் செல்வம், மக்கள் தொடர்பு மேலாளர் பிச்சை, வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி, வட்டார கல்வி அலுவலர் சரவணக்குமார், வட்டார சுகாதார துறை இணை பதிவாளர், காவல் துறை மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.
ஸ்பீச் நிதி இயக்குநர் செல்வம் பேசுகையில், பெண் குழந்தைகளுக்கு பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், கழிவறை வசதி குறைபாடுகளால் பெண்குழந்தைகள் பள்ளி இடைநிற்றல் ஆக வாய்ப்புள்ளதாகவும் கூறினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பேசுகையில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு பற்றி கற்பிக்கும் அதே வேளையில் ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்கம் பற்றி கற்பிக்க வேண்டியது நம் கடமை என்றும் அதை அனைவரும் இணைந்து செய்ய வேண்டும் எனவும் கூறினார்,
ஊராட்சி ஒன்றியத் தலைவர் பேசுகையில், ஊராட்சி அளவில் பஞ்சாயத்து தலைவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும், ஸ்பீச் நிறுவனம் போன்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குழந்தைகளின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu