பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பேரூராட்சித் தலைவர்

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த பேரூராட்சித் தலைவர்
X

காரியாபட்டி பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை தலைவர் செந்தில் கேட்டறிந்தார்

பேரூராட்சித் தலைவர் செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார், கவுன்சிலர்கள் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர்

காரியாபட்டி பேரூராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை தலைவர் செந்தில் கேட்டறிந்தார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது .அனைத்து வார்டுகளிலும் பேரூராட்சித் தலைவர் செந்தில், செயல் அலுவலர் ரவிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குடிநீர்வசதி, சாலைவசதி தெருமின் விளக்கு சாக்கடை கழிவுநீர் போன்ற வசதிகள் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிநது வருகின்றனர். பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் தலைவர் செந்தில், நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அனைத்து வார்டுகளில் பொதுமக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் வசதி சீராக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், குப்பைகள்பல நாட்களாக தேங்கி கிடக்காமல் உடனுக்குடன் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு செந்தில் தெரிவித்தார். துணைத் தலைவர் ரூபா சந்தோசம், கவுன்சிலர்கள் முனீஸ்வரி சங்கரேஸ்வரன் சரஸ்வதி உட்பட பலர் உடன் சென்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்