கட்டிட பிளான் வரிசைப்படி வழங்கப்படும்: பேரூராட்சித் தலைவர்

கட்டிட பிளான் வரிசைப்படி வழங்கப்படும்: பேரூராட்சித் தலைவர்
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. 

காரியாபட்டியில் முன்னுரிமை அடிப்படை யில் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படும். பேரூராட்சி தலைவர் செந்தில் தெரிவித்தார்

காரியாபட்டியில் முன்னுரிமை அடிப்படை யில் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படும் எனபேரூராட்சி தலைவர் செந்தில் தெரிவித்தார்.

காரியாபட்டி பகுதியில் ,கட்டிட வரைபட அனுமதி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று பேரூராட்சித் தலைவர் செந்தில் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார், துணைத் தலைவர் ரூபி சந்தோசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில், காரியாபட்டி பேரூராட்சி சுகாதார மேற்பார்வை யாள ராக பணியாற்றி மறைந்த ராம்குமாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து,கவுன்சிலர்களின் விவாதம் நடைபெற்றது..

கவுன்சிலர் முத்துக்குமார்: காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

கவுன்சிலர் தீபா - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் அச்சம்பட்டி வரை வாருகால் கட்டுவதற்கு அனுமதி வழங் கிய அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் , உறுதுணையாக இருந்து திட்டத்தை நிறைவேற்றிய பேரூராட்சித்தலைவர் செந்தில் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

கவுன்சிலர் நாகஜோதி : காரியாபட்டி பகுதியில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் நபர்களுக்கு இலவச வீடுகள் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் . கவுன்சிலர்கள்: காரியாபட்டி பேரூராட்சி பகுதியில் கட்டிட வரைபடம் அனுமதிக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு அனுமதி உடனடியாக கிடைக்காமல்ங்க காலதாமதம் ஏற்படுவதுதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட கின்றனர் என்றார் .

கூட்ட முடிவில் பேரூராட்சித் தலைவர் செந்தில் கூறியதாவது: காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர், தெருமின் விளக்கு வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள் துரிதமாக செய்து வருகிறோம் . விரிவாக்க பகுதிகளில் குடிநீர் பைப்லைன்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

பழுதடைந்த தெருக்களில் பேவர்பிளாக் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் தெரிவித்தபடி இனிமேல் , கட்டிட வரைபட அனுமதிக்கு பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் முறையாக பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் கட்டிட வரைபட அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று பேரூராட்சி சேர்மன் செந்தில் தெரிவித்தார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் லியாகத் அலி, முனிஸ்வரி, முகமது முஸ்தபா சங்கரேஸ்வரன், வசந்தா, நாகஜோதி, தீபா, சத்தியபாமா, செல்வராஜ், முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!