"காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை" நூலுக்கு தமிழ் வளர்ச்சித்துறை விருது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி யை சேர்ந்தவர் பரதன் . இவர் ,புள்ளியல் துறையில் அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது, ஓய்வுக்குபிறகு தன்னுடைய இல்லத்தை மனுநூல் நிலையம் என்ற பெயரில் நூலகம், நடத்தி வருகிறார். அரசு தேர்வு பணி, பயிற்சிகள், யோகா பயிற்சி, சிலம்பாட்டம் , கேரம், தேவார போட்டிகள் மற்றும் மாணவர்களின் கல்விக்காக பல உதவிகள் செய்வது போன்ற பணிகளை செய்து வரும் சமூக சேவகர்.
இவர் "காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை " என்ற நூலை பயணம் மேற்கொண்டு எழுதியுள்ளார். 2018 -ல் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தில் காரியாபட்டி வட்டார கிராமங்கள் உருவாகியது வரலாறு.. கிராம பெயர்கள் வருவதற்கு காரணம், சுதந்திர போராட்டத்தில் இந்த பகுதியில் போராடிய தியாகிகளின் வரலாறுகள், சர்வமத வழிபாட்டு தலங்கள், மண்ணின் வகை, விவசாய மேம்பாடு பற்றி விபரங்களை கிராம கிராமாக சுற்றுபயணம் சென்று சேகரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை விருது 2018சிறந்த நூலக இந்த நூலை தேர்வு செய்தது, அமைச்சர் தங்கம் தென்னரசு விருது வழங்கி ஆசிரியரை கௌரவப்படுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu