ஆசிரியர் தவறவிட்ட தங்கச்சங்கிலி யை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகள்

ஆசிரியர் தவறவிட்ட தங்கச்சங்கிலி யை மீட்டு  காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகள்
X

விருதுநகர் அருகே காணாமல் போன தங்கச் செயின் திரும்பக் கிடைக்க காரணமாக இருந்த மூன்று மாணவிகளின் கைகளினாலேயே தமிழாசிரியர் ஆசிரியர் சசிகலா தனது செயினை பெற்றுக் கொண்டார்.

பள்ளி சிறுமிகள்.. குழந்தைகளின் நேர்மையை நரிக்குடி காவல் துறையினர் வெகுவாக பாராட்டினர்

நரிக்குடி பேருந்து நிலையத்தில் தங்கச் செயினை பறிகொடுத்த தமிழாசிரியர். பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி சிறுமிகள்.. குழந்தைகளின் நேர்மையை வெகுவாக போலீஸார் பாராட்டினர்

விருதுநகர் அருகே,நரிக்குடி பேருந்து நிலையத்தில், உலக்குடி செல்ல வேண்டி பேருந்திற்காக காத்திருந்த உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சசிகலா அவசரமாக, பஸ் ஏறி பள்ளிக்கு சென்றார். அப்போது தனது இரண்டரை பவுன் தங்கசெயினை நரிக்குடி பேருந்து நிலையத்தில் காணாமல் போனது தெரியவந்தது இதனையடுத்து, செயின் காணாமல் போனது குறித்து பள்ளி ஆசிரியர் சசிகலா நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதற்கிடையில், பள்ளிக்கு வந்த நரிக்குடி தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவிகளான நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப்பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் கீழ கிடந்த தங்கச்சங்கிலியை எடுத்து தலைமையாசிரியர் மூலமாக நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, போலீசார் கொடுத்த தகவலின் பேரில், காவல் நிலையம் வந்த பள்ளி தமிழாசிரியர் சசிகலா காணாமல் போன செயின் குறித்த அடையாளங்களை தெரிவித்த நிலையில் நரிக்குடி காவல்துறையினர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோரின் முன்னிலையில் செயின் திரும்பக் கிடைக்க காரணமாக இருந்த மூன்று மாணவிகளின் கைகளினாலேயே தமிழாசிரியர் ஆசிரியர் சசிகலா தனது செயினை பெற்றுக் கொண்டார்.

மேலும், மாணவிகளின் நேர்மையான செயலை கண்ட நரிக்குடி காவல்துறையினர், தமிழாசிரியர் சசிகலா மற்றும் தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோர் மாணவிகளை வெகுவாக பாராட்டினர்.மேலும் செயினை மீட்டு கொடுத்த நரிக்குடி போலீசாருக்கு தமிழாசிரியர் சசிகலா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!