காரியாபட்டி அருகே தோப்பூர் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்

காரியாபட்டி அருகே தோப்பூர் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தோப்பூர் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் நிலையூர் கால்வாய் மூலமாகவும், நரிக்குடி ஒன்றியப் பகுதிக்கு கிருதுமால் நதிமூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது

காரியாபட்டி தோப்பூர் கண்மாய் வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், தோப்பூர் கண்மாயக்கு செல்லும் வரத்துக் கால்வாய் காரியாபட்டி பேருராட்சி எல்லைக்குள் அமைந்துள்ளது. கடந்த 2 தினங்களாக வரத்துக்காயில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 15ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வருவதால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்:

தற்போது, தோப்பூர் வரத்துக் கால்வாயில் கிடக்கும் முட்செடிகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பணி முடிவடைந்ததும், கண்மாய்க்கு முழு கொள்ளவுக்கு தண்ணீர் நிரம்பிவிடும். மதுரை மாவட்டத்தில் வைகை தண்ணீர் நிரம்பி வருவதால், மதுரை - விருதுநகர் - சிவகங்கை இராமநாதபுரம் கண்மாய்களுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியில் நிலையூர் கால்வாய் மூலமாகவும், நரிக்குடி ஒன்றியப் பகுதிக்கு கிருதுமால் நதிமூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

காரியாபட்டி அருகே எஸ்.தோப்பூர் கிராம கண்மாய் பகுதிக்கு மதுரை மாவட்டம் கொக்குளம் கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோப்பூர் கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு செய்தனர். தற்போது, கல்லுப் பட்டி அருகே மடை திறக்கப்பட்டதும், 15 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் வருகை தந்தது. ஒன்றியக்கவுன்சிலர் தோப்பூர் முருகன் மற்றும் விவசாயிகள் கால்வாயில் மலர்தூவி வரவேற்ற்னர்.

Tags

Next Story
திருச்செங்கோட்டில் திருநீலகண்டா் குரு பூஜை..!