காரியாபட்டி அன்னை அமலா ஆலயத் திருவிழா: சிறப்பு திருப்பலி

காரியாபட்டி அன்னை அமலா ஆலயத் திருவிழா: சிறப்பு திருப்பலி
X

காரியாபட்டி அன்னை அமலா ஆலயத்தில் சிறப்பு  திருப்பலி.

காரியாபட்டி அன்னை அமலா ஆலயத் திருவிழா: சிறப்பு திருப்பலி

காரியாபட்டி புனித அமல அன்னை ஆலய நவநாள் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது:

காரியாபட்டி - டிச.2.

காரியாபட்டி அமல அன்னை ஆலய நவநாள் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கள்ளிக்குடி சாலையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித அமல அன்னை ஆலயத்தின் சார்பாக, நவநாள் பெருவிழா 1 ந் தேதி முதல்வரும் 7ந் தேதி வரை நடைபெறுகிறது.

1ந் தேதி இரவு கொடி ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

அமலா உயர்நிலைப் பள்ளியிலிருந்து பவனியாக கொண்டு வரப்பட்ட கொடியை காரியாபட்டி அமல அன்னை பங்குதந்தை ஜோசப். அமலன் முன்னிலையில், மதுரை உயர்மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜெரோம் ஏரோணிமுஸ் ஏற்றிவைத்து திருப்பலியை தொடங்கி வைத்தார். 2 ந்தேதி மதுரை பிரிட்டோ பள்ளிகளின் பங்குதந்தைகள் குரூஸ் தினகரன், மரிய அருள்செல்வம், 4 ந் தேதி திருச்சி ரோசாரியன் தியான இல்ல பங்குதந்தை ஜோசப், 5 ந் தேதி மதுரை கருமாத்தூர் தூய ஆவியார் சபை பங்குதந்தை கொன்னடி, 6 ந் தேதி புதை அகஸ்தினார். சபை தியானக்குழு இயக்குநர் சந்தியாகு, ஆகியோர் கலந்துகொண்டு திருப்பலி பூஜைகள் நடத்துவார்கள்.

7ந் தேதி அமல அன்னை தேர்ப்பவனி விருதுநகர் வட்டார அதிபர், அருள் ராயன் தலைமை யில் நடைபெறுகிறது. தொடர்ந்து, 9 நாட்கள் நடைபெறும் விழாவில், மிட்பு பாதையின் முன்னோடி மனுகுலத்தின் தாய், திருக்குடும்ப அரசி, பாவிகளுக்கு வழிகாட்டி வரலாற்றில் வாழும் தாய், போன்ற தலைப்புகளில் மறையுரை நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில், புனித வளனார் ஆலயம், ஆர்.சி. பள்ளிகள், செயின்ட் மேரீஸ். பள்ளி, சுரபி, நிறுவனம அமலா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பங்குமக்கள் பங்கேற் கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!