காரியாபட்டியில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

காரியாபட்டியில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்
X

காரியாபட்டியில் மதிமுக சார்பாக  நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் 

தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்புவதற்கான கையெழுத்து இயக்கம்

.தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ,குடியரசு தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்புவதற் கான கையெழுத்து இயக்கம் காரியாபட்டி மதிமுக சார்பாக நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். நகரச்செயலாளர் மிசாசாமிக் கண்ணு முன்னிலை வகித்தார்.மாவட்ட அவைத் தலைவர் மாரியப்பன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், திருச்சுழி தொகுதி தகவல் தொழில் நுட்ப பிரிவு மார்க்கண்டேயன், பொதுக் குழு அமிர்தராஜ், மாவட்ட பிரதிநிதிகள் தர்மராஜ்-முத்து மாரி , காளிமுத்து, பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் ஜூன் 20 தொடங்கப்பட்டது..இதுகுறித்து கையெழுத்து இயக்கத்தை தலைமை வகித்த வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதிமுகவின் 29வது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் வைகோ இவ்வியக்கத்தை தொடக்கி வைத்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!