சேது பொறியியல் கல்லூரியில் வாழ்க்கை திறன் பயிற்சி முகாம்
![சேது பொறியியல் கல்லூரியில் வாழ்க்கை திறன் பயிற்சி முகாம் சேது பொறியியல் கல்லூரியில் வாழ்க்கை திறன் பயிற்சி முகாம்](https://www.nativenews.in/h-upload/2022/04/29/1525142-img-20220429-wa0009.webp)
சேது பொறியியல் கல்லூரி, இயந்திரவியல் துறை சார்பாக உண்டு உறைவிடம் பள்ளி மாணவிகளுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி, இயந்திரவியல் துறை சார்பாக, உண்டு உறைவிடம் பள்ளி மாணவிகளுக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். பேராசிரியர் பரமசாமி வரவேற்றார்.
காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப்பள்ளி நிறுவனர் விக்டர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பயிற்சியினை தொடங்கி வைத்தார். முகாமில், நரிக்குடி அமுக்குளம் கஸ்தூரிபா பாலிகா வித்யாலயா சுரபி உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த முகாமில், கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் குறித்தும், பொறியியல் துறையில் கணினியின் பங்கு பற்றியும், உற்பத்தி பொருட்கள் இயந்திரங்கள் மூலம் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது, வாழ்க்கை கல்வி மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பேராசியர் நாகராஜ் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu