/* */

காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டம்

இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் திட்டம்
X

காரியாபட்டி பேரூராட்சியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்

காரியாபட்டி பேரூராட்சியில் இல்லங்கள் தோறும் மரக்கன்றுகள் நடும் திட்டம் பேரூராட்சித் தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்:

தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2.80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை வண்டலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவசாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், தொழிற்சாலைகளுக்கு சொந்தமான நிலங்கள், ஏரிக்கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்றுப் படுகைகள் மற்றும் பிற பொது நிலங்களில் பொருளாதாரம் மற்றும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப்படும்.பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்.

இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் இத்திட்டம் உதவும்.பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நாற்றங்கால்கள் போன்றவற்றின் மூலமாக 2.80 கோடி மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டுள்ளன.

கொரோனா காலத்தில் போதிய ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர். அதனை தவிர்க்க வேண்டும் என்றால் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொருவரும் வீடுகள், கல்லூரி, தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் தங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ளார்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் நிறுவனம் சார்பாக இல்லங்கள் தோறும் மாக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இல்லங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். எஸ்.பி எம்.டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, கிரீன் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ராணி சட்ட ஆலோசகர் செந்தில்குமார் ஆசிரியர் ஆறுமுகம், திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மனோஜ்குமார் , சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சரவணன், முன்னாள் இராணுவ வீரர் நரசிம்மராஜ், சமூக ஆர்வலர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், கிரீன் பவுண்டேசன் நிறுவனர் கூறியதாவது:தமிழக முதல்வரின் உன்னதமான பசுமை தமிழகம் திட்டத்தை காரியாபட்டி வட்டாரத்தில் முழுமையாக செயல்படுதத்தப்படும். பேரூராட்சித்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஒத்துழைப்போடு வாரம் ஒரு நாள் விடுமுறை தினத்தன்று வீடுகள் தோறும் மக்களை நேரில் சந்தித்து மரக்கன்றுகள் வழங்கப் படும்.பொதுமக்கள் கேட்கும் விருப்பமுள்ள கொய்யா, மாதுளை பப்பாளி மற்றும் மூலிகை செடிகள், வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வீடுகளில் வழங்கும் மரங்களை சிறந்த முறையில் பராமரிக்கும் இல்லத்தரசிகளுக்கு பரிசுகள் வழங்கப் படும் என்று தெரிவித்தார்.காரியாபட்டி,எஸ்.எம்.பி. டிரஸ்ட், பல்வேறு சமூகப் பணிகளை அப் பகுதியில் தொடர்ந்து செய்து வருகிறதாம். நிர்வாகி அழகர்சாமி தலைமையில் அப்பணியானது நடைபெற்று வருகிறது.

Updated On: 6 Nov 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு