மழை நீர் வடிகால் அமைக்க ரூ 3 கோடி நிதி: முதலமைச்சருக்கு பேரூராட்சி நிர்வாகம் நன்றி

மழை நீர் வடிகால் அமைக்க ரூ 3 கோடி நிதி: முதலமைச்சருக்கு  பேரூராட்சி நிர்வாகம் நன்றி
X

காரியாபட்டியில் நடைபெற்ற  பேரூராட்சி கூட்டம்

தமிழக முதல்வர், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

காரியாபட்டியில் மழை நீர் வடிகால் அமைக்க 3 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு பேரூராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சிக்கு, மழைநீர் வடிகால் அமைக்க 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு பேரூராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப் பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமையில், செயல் அலுவலர் அன்பழகன் முன்னிலையில் நடை பெற்றது.

கூட்டத்தில், மதுரை-தூத்துக்குடி மெயின் சாலையில் முக்கு குரோடு முதல் கே.செவல் பட்டி வரை, முக்குரோடு முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை, தேவர் சிலை முதல் பாரத் பள்ளி வரை சிறுபாலம் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல், மதுரை தூத்துக்குடி மெயின் சாலை மற்றும் கள்ளிக்குடி மெயின் சாலையில் சிறுபாலம் மழைநீர் வடிகால் அமைக்க தமிழ் அரசு 2 கோடியே 97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவுக்கும், திட்டம் செயல்பட உறுதுணையாக இருந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் , அனைத்து கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேரூராட்சிக்கு சொந்தமான சாலையை அனுமதி இன்றி கழிவுநீர் குழாய்கள் பதிக்க தோண்டுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!