தரம் உயர்வுக்கு நன்றி தெரிவித்து காரியாபட்டி பேரூராட்சியில் தீர்மானம்

தரம் உயர்வுக்கு  நன்றி  தெரிவித்து காரியாபட்டி பேரூராட்சியில்   தீர்மானம்
X

 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது

காரியாபட்டி பேரூராட்சியை தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேறியது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியை தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி பேரூராட்சி க்கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது . ரூபி சந்தோசம் முன்னிலை வகித்தார.

கூட்டத்தில், நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில், காரியாபட்டி பேரூராட்சியை, தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்திய மைக்காகவும், பேருந்து நிலையத்தை விரிவாக்க செய்ய நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர்களுக்கு காரியாபட்டி பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவித்து பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும்,கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் கவுன்சிலர் நாகஜோதி : அச்சம்பட்டி பகுதியில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும். கவுன்சிலர் செல்வராஜ். அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருகிறது.கள்ளிக்குடி சாலையில் வரத்துக் கால்வாய் சீரமைப்பு செய்ய வேண்டும் முத்துக்குமார்-தெருமின் விளக்குகள் கூடுதலாக வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கேட்கப்பட்டது.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் லியாகத் அலி, செல்வராஜ், முகமது முஸ்தபா சங்கரேஸ்வரன், வசந்தாதீபா, ராமதாஸ், முனீஸ்வரி சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil