காரியாபட்டி பேரூராட்சியில், புதுப்பிக்கப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு
காரியாப்பட்டி பேரூராட்சியில், சமுதாயக்கூடத்தை தலைவர் செந்தில் திறந்து வைத்தார்.
காரியாபட்டி பேரூராட்சி கரிசல்குளத்தில், 16 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா நடந்தது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கரிசல் குளத்தில் புதிப்பிக்கப் பட்ட சமுதாயக்கூடம் திறந்து வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி 14-வது வார்டு கரிசல் குளத்தில் தெற்கு பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. கட்டிடத்தை பராமரிப்பு செய்து தரக்கோரி, மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், அயோத்தி தாஸ் குடியிருப்பு திட்டத்தில் சமுதாயக் கூடம் பராமரிப்பு பணிகளுக்காக 16 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, சமுதாய கூடம் பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டது. பேருராட்சி தலைவர் செந்தில் பங்கேற்று, புதுபிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu