மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் பணி: நிதி அமைச்சர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு செய்யும் முகாமை நிதியமைச்சர் தங்கம்தென்னரசு ஆய்வு செய்தார்
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம், அமைச்சர் ஆய்வு.
அமைச்சர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பங்கள் பெறப்படும் முகாம்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், வட்டாட்சியர் சுப்பிர மணியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், திமுக ஒன்றிய கழகச் செயலாளர்கள் கண்ணன், செல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாவட்டங்கள் தோறும் பெண்களுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் பல இடங்களில் பதியப்பட்டு வருகிறது.இந்த இடங்களை, அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.அரசானது, இத் திட்டத்தில் பயன் அடைய யார் தகுதியுடையவர்கள் என்பதை விளம்பரப்படுத்தினால், முகாம்களில் பெண்கள் வந்து காத்திருப்பதை தவிர்க்கலாம் என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.மதுரை அருகே சோழவந்தான் பகுதியில், சில இடங்களில் பெண்கள், பதிவு செய்ய அலைய நேரிடுவதாக, சிலர் புலம்புவதை காண முடிந்தது.
வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகைக்கு மீண்டும் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 15 ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டது. பிறகு விண்ணப்பங்கள் கொடுப்பது நிறுத்தப்பட்டு 24 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், விடுபட்டவர்களுக்காக மீண்டும் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்படும். அதாவது வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பின்னர் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் முதல் மீண்டும் விண்ணப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu