காரியாபட்டி அருகே மழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

காரியாபட்டி அருகே மழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
X

காரியாபாட்டி பகுதியில் தொடர் மழையால்  பாதிக்கப்பட்ட  நெற்பயிர்கள்

மழையால் காரியாபட்டி அருகே பாப்பனம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

விருதுநகர் மாவட்டத்திலேயே பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இருக்கன்குடி சாத்தூர் அருகே இருக்கன்குடியில் வைப்பாறு மற்றும் அர்ஜுனா நதிகளை இணைத்து தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படும் வகையில் அணை கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பருவமழை போதியளவு பெய்யாததால் அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

தற்போது சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தூர் பகுதியில் உள்ள அனைத்து பாசன கண்மாய்கள் நிறைந்துள்ளது. அதனால் அங்கிருந்து வெளியேறி வரும் மழை நீர் இருக்கன்குடி அணைக்கு வந்து அணையின் முழு கொள்ளவு 24 அடியில் தற்போது 11 அடியாக உள்ளது. அணையின் உள்பகுதியில் கருவேல மரங்கள் முளைத்து உள்ளதால் நீர் வரும் வழிகள் அனைத்தும் தடையாக உள்ளது. வத்திராயிருப்பு, கான்சாபுரம், அத்தி கோவில், ரஹ்மத் நகர், கிழவன்கோவில், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக பாதரங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் அருகிலுள்ள வயல்வெளிகளில் தண்ணீர் சென்று ஏராளமான நெற்கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நிரம்பும் கண்மாய்கள் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையினால் வல்லம்பட்டி கண்மாய் 6 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பி வழிகிறது.

இக் கண்மாயை நம்பி உள்ள கண்டியாபுரம், பனையடிப்பட்டி, கொம்மங்கிபுரம், மஞ்சள் ஓடைப்பட்டி, ஜெகவீரம்பட்டி, விஜயகரிசல்குளம், கோட்டைப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தாயில்பட்டி பெரியகுளம் கண்மாய் 15 ஆண்டுக்கு பிறகு நிரம்பியுள்ளது. குகன் பாறையில் உள்ள கண்மாய் நிறைந்துள்ளது. மேலும் செவல்பட்டியில் உள்ள இலந்தை குளம் கண்மாய், பாம்பலம்மன் கண்மாய், விஜயகரிசல்குளம் பாண்டியன்குளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளன.

காரியாபட்டியில் பெய்த தொடர் மழையினால் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கியது. 200 ஏக்கர் விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது. காரியாபட்டியல் ,பெய்த தொடர் மழையினால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, தாலுகா கம்பிக்குடி , பாப்பனம், அல்லாள பேரி, மறைக்குளம், சத்திரம் புளியங்குளம், மேலக் கள்ளங்குளம் உட்பட 50-க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

நேற்று பெய்த மழையினால், காரியாபட்டி அருகே பாப்பனம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி சேதமடைந்தன. இதனால் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மழை சேதம், காட்டு பன்றிகள் பயிர்களை அழிப்பது போன்ற சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.காரியாபட்டி வேளாண்மைதுறை, வருவாய்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்