காரியாபட்டி அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

காரியாபட்டி அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
X

காரியாபட்டி அருகே புதுப்பட்டியில், பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், பி.புதுப்பட்டி அரசு மேனிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது

விருதுநகர் அருகே, காரியாபட்டி பி.புதுப்பட்டி பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், பி.புதுப்பட்டி அரசு மேனிலைப் பள்ளியில், தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அய்யம்மாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயராணி, ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மரக்கன்றுகள் நடும் விழா...

காரியாபட்டி சூரனூரில் கைலாசநாதர் ஆனந்த வல்லி கோயில் நந்தவனத்தில், விருதுநகர் ஆலமர அமைப்பின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.கோயில் பட்டர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் ராதிகா, ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலமரம் ஒருங்கிணைப்பாளர் புஷ்ப ராஜ் வரவேற்றார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாச்சியார், ஏ.எஸ்.பி., கருண்காரத் மரக் கன்றுகளை நட்டு பணியை தொடக்கி வைத்தனர். ஆலமர அமைப்பு பற்றி தலைவர் ரவீந்திரன் பேசினார்.

இதில், இன்பம் பவுண்டேஷன் நிறுவனர் விஜயகுமார், ஒருங்கிணைப் பாளர் தமிழரசி, மனித பாதுகாப்புக் கழக மாவட்டத் தலைவர் பிரின்ஸ், நிர்வாகிகள் கார்த்திக், முனிஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, வி.ஏ.ஓ. தனசேகரன், நிர்வாகி சக்திவேல் செய்திருந்தனர். ஆலமர அமைப்பு நிர்வாகி எட்வர்ட் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!