காரியாபட்டி பகுதிகளில் ஐந்தாயிரம் பனை விதைகள் நடும் திட்டம்

காரியாபட்டி பகுதிகளில் ஐந்தாயிரம் பனை விதைகள் நடும் திட்டம்
X

 கிரீன் பவுண்டேசன் சார்பில் காரியாபட்டி ஒன்றியத்தில் நடந்த பனைவிதைகள் நடும் திட்டப்பணிகள்

கிரீன் பவுண்டேசன் சார்பில் காரியாபட்டி ஒன்றியத்தில் 5000 ஆயிரம் பனைவிதைகள் நடும் இயக்கம் நடைபெறுகிறது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில் 5ஆயிரம் பனை விதைகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிரீன் பவுண்டேசன் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து கிராமங்களிலும் பனை விதைகள் நடும் பணியினை செய்து வருகிறது.

காரியாபட்டி ஒன்றியத்தில், கிழவனேரி, டி.செட்டிகுளம், தாமரைக்குளம், கல்குறிச்சி, தோணுகால், தண்டியனேந்தல் , பிசிண்டி அச்சங்குளம் கிராமங்களில் பனை விதைகள் நட்டு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காரியாபட்டி ஒன்றியம் டி.வேப்பங்குளம் ஊராட்சி மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக இலுப்பகுளத்தில் பனைவிதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் ஆதிஈஸ்வரன் தலைமை வகித்தார். கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் முன்னிலை வகித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாயப்பு திட்டப் பணியாளர்கள் மற்றும் கிராமபுற இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து ஊருணி மற்றும், கணிமாய் கரையில் 500 க்கு மேற்பட்ட பனைவிதைகளை நட்டுவைத்தனர்.

இது குறித்து , கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் கூறுகையில் : தமிழகத்தின் அடையாளமாக இருந்த பனைமரங்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு பெரிதும் பலன் தருவதோடு, ஊருணி, மற்றும் கண்மாய் கரைகளை பாதுகாக்க கூடிய பனை மரங்களை மீண்டும் மக்கள் வளர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகத் தின் துணையோடு இந்த பனைவிதைகள் நடும் இயக்கத்தை துவக்கியுள்ளோம். முதற்கட்டமாக 5 ஆயிரம் பணை விதைகள் அனைத்து கிராமங்களிலும் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது