சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசளிப்பு விழா
X

சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.

காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி மற்றும் அருப்புக்கோட்டை விருதுநகர் சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கப்பட்டு 11ஆம் தேதி நிறைவு பெற்றது .

துவக்க விழாவை, கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ். முகமது ஜலீல் நிர்வாக அதிகாரிகள் எஸ். எம் .சீனி மொகைதீன் ,எஸ் .எம் .சீனி முகமது அலி யார் மற்றும் உலக அளவிலான சதுரங்க கழகத்தின் முன்னாள் தலைவர் சுந்தர் துவக்கி வைத்தனர் . இதில், 300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மாநில அளவில் இருந்து கலந்து கொண்டனர். அதில், ஆண்கள் பிரிவில் 10 பெண்கள் பிரிவில் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டனர் .

ஆண்கள் பிரிவில், சாம்பியன் பட்டத்தை மாஸ்டர் அஸ்வந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் பிரிவில் தேஜஸ்வினி திருவள்ளூர் மாவட்டத்திலிருந்தும் இருந்தும் பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட 20 போட்டியாளர்களும் தேசிய அளவில் நியூ டெல்லியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் 15 வயதிற்கு உட்பட்ட போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்க உள்ளனர் .

போட்டியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள் மெடல் கோப்பை மற்றும் முப்பதாயிரம் வரை பரிசு தொகை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவை, கல்லூரித்தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். முகமது ஜலீல், தலைமை தாங்கி துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார்.சதுரங்க போட்டிகளின், இன்டர்நேஷனல் ஆர்பிட்டர் அனந்தராம் நன்றி உரை வழங்கினார் .கல்லூரி நிர்வாக அதிகாரிகள் எஸ். எம். சீனி முகைதீன், எஸ் எம், சீனி முகமது அலி ,யார், எஸ், எம், நிலோஃபர் பாத்திமா, எஸ், எம், நாச்சியா பாத்திமா, துணை முதல்வர் டாக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!