காரியாபட்டி அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
காரியாபட்டியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் உதவி ஆய்வாளர் அசோக்குமார் பேசினார்.
Police Department Awareness Programme
தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளி மாணவர்களிடையே பல்வேறு வகையான பழக்கங்கள் அதிகரித்திருப்பதை செய்திகள் வாயிலாக காண்கிறோம். ஒரு சில மாணவர்கள் சிறுவயது முதலே போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகி அதிலிருந்து மீளமுடியாமல் பெற்றோர்கள் வேதனைப்பட்டு வருவதும் அறிந்தது. இதற்காக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸ் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடந்தது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல்துறை சார்பில், விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில், காரியாபட்டி காவல் துறை சார்பாக பள்ளி மாணவர்
களுக்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது . காரியாபட்டி கல்லுப்பட்டிஊராட்சி உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். காரியாபட்டி சப் இன்ஸ் பெக்டர் அசோக் குமார் பங்கேற்று பே சினார். அப்போது, மாணவர்களிடம் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால். ஏற்படும் தீமைகள் பற்றியும்,பாலியல் வன்முறை குற்றங்களை குறித்தும் , இளவயது திருமணம், தடுத்தல்., குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுத்தல் , மாணவர்களின் கல்விக்காக அரசு திட்டங்கள் குறித்து சப். இன்ஸ் பெக்டர் மாணவர் களிடம் பே சினார்.
கூட்டத்தில், சாலை விதிகளைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu