கண்மாயில் கிராவல் எடுக்க தடை செய்யக்கோரி கிராம மக்கள் மனு

கண்மாயில் கிராவல் எடுக்க தடை செய்யக்கோரி கிராம மக்கள் மனு
X

காரியாபட்டி அருகே கிராவல் எடுக்க தடை விதிக்கக் கோரி  கிராம் மக்கள் மனு அளித்தனர்.

கண்மாயில் எவ்வித அனுமதியின்றியும் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் கிராவல் மண் அள்ள ஏற்பாடு செய்துள்ளனர்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கல்லுப்பட்டியில், கண்மாயில் கிராவல் மண் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என்று, கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம், மனு செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுப்பட்டி கிராமத்துக்கு சொந்தமான 4 கண்மாய்கள் உள்ளது. இதில், முசிலான் ஓடை கண்மாயில், தனி நபர்கள் கிராவல் மண் அள்ளுவதற்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும், பொதுமக்கள் சார்பாக சென்று கண்மாயில் கிராவல் மண் எடுக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினோம். மேற்கண்ட கண்மாயில் எவ்வித அனுமதியின்றியும், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், கிராவல் மண் அள்ள ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்கெனவே, முசிலோன் ஓடை கண்மாயில் நான்குவழிச்சாலைக்கு கிராவல் மண் எடுத்ததால், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அருகில் உள்ள தனியார் கல்லூரி கழிவுநீர் கண்மாயில் தேங்கி கிடக்கிறது. இதனால், சுற்றுபுறங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. எங்கள் கிராமத்து விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் கண்மாய்களில் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விவசாயம், மண்பாண்ட தொழில் பணிகளுக்காக வண்டல் மண், கிராவல் மண் அள்ள தமிழக அரசு அனுமதி

அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள வண்டல் மண், கிராவல் மண்ணை விவசாயம், பொது மண்பாண்ட தொழில் பணிக ளுக்காக பொதுமக்கள் எடுத்துச் செல்ல இலவசமாக அனுமதி வழங்குவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதன்படி பயனாளிகள் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய கண்மாய், ஏரி, குளம் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.

விவசாய பணிக்காக வண்டல் களிமண் கிராவல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கும் நபர் விவ சாய நிலம் வைத்துள்ளார் அல்லது கிராம அடங்கல் பதிவேட்டின்படி குத்தகை பெற்று விவசாயம் செய்து வருகிறார் என்பதற்கும், அவருடைய நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை, புஞ்சை) குறித்தும் விவசாய நிலத்தின் விஸ்தீரணம் குறித்தும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலு வலரிடம் சான்று பெற்று விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மண்பாண்டம் தொழில் செய்பவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் சட்டம் 1983-ன் கீழ் தமிழ்நாடு மண்பாண்டம் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினராக இருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 75 க.மீட்டரும், எக்டேர் ஒன்றுக்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும் புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டரும் எக்டேர் ஒன்றுக்கு 22 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண், கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

வண்டல் மண், கிராவல் மண் நீர்வளத்துறை பொறியாளர் ஊரக வளர்ச்சி துறை பொறியாளர் மூலம் வாகனத்தில் ஏற்றி விடப்படும். தூர்வாருதல் மற்றும் வாகனத்தில் வண்டல் மண், கிராவல் மண்ணை ஏற்றுவதற்கான கட்டணமாக முதன்மை தலைமைப் பொறியாளர் அல்லது மாற்றம் ஏதும் செய்யப்பட்ட தொகையை செயற்பொறியாளரின் பெயரில் காசோலை யாக மனுதாரரால் அரசுக் கணக்கில் செலுத்தப்பட வேண்டும் . வண்டல் மண், கிராவல் மண் எடுத்துச்செல்ல கலெக்டரின் உத்தரவு ஆணை பெற்றவுடன் அதன்படி மனுதாரர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியருடன் ஒரு ஒப்பந்தப்பத்திரம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்னரே கண்மாயிலிருந்து வண்டல் மண் கிராவல் மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இவ்வாறு அரசாணை இருக்கின்ற போதும், இது போன்ற எதிர்ப்புகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.


Tags

Next Story
ai in future education