காரியாபட்டியில் பனை ஓலை விற்பனை மையம் தொடக்கம்

காரியாபட்டியில் பனை ஓலை உற்பத்தி பொருள் விற்பனை மையம் நபார்டு வங்கி உதவியுடன் தொடங்கப்பட்டது
காரியாபட்டியில் பனை ஓலை உற்பத்தி பொருள் விற்பனை மையம் நபார்டு வங்கி உதவியுடன் தொடக்கம்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் பனை ஓலை பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. காரியாபட்டியில் , பனை ஓலை பொருள் விற்பனை மையம் தொடங்கப்பட்டது. இந்த உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தும் நோக்கத்துடன் நபார்டு வங்கி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நபார்டு வங்கி பொதுமேலாளர் விந்தியா, விற்பனை மையத்தை தொடங்கி வைத்தார் .
உதவி பொதுமேலாளர் ராஜசுரேஷ்வரன், அருண்குமார், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆரோக்கிய விக்டர், உமன் என்.ஜி.ஒ செயலாளர் ஜோதிபாலன் ஆகியோர் பங்கேற்றனர் .
பனை மரத்தின் இலை பனையோலை எனப்படுகிறது... பனையோலை விசிறி போன்ற வடிவத்தையுடையது. ஏறத்தாழ ஐந்து அடி விட்டம் கொண்டதாக இருக்கும். பனம் மட்டை அல்லது பனை மட்டை என்று அழைக்கப்படும் இதனுடைய காம்பு உறுதியானது, அரை வட்ட வடிவமான குறுக்கு வெட்டுமுகம் கொண்டது. அத்துடன் இதன் விளிம்புகளில் கருநிறமான, வாளின் பற்கள் போன்ற அமைப்பு உள்ளது இது கருக்கு எனப்படும்.மறைப்பு வேலியொன்றில் பயன்படுத்தப்பட்டுள்ள பனையோலைகள்.பனையோலைக் குருத்து இள மஞ்சள் நிறம் கொண்டது. விரிந்து முதிரும் போது கரும் பச்சை நிறமாகத் தோற்றமளிக்கும். காய்ந்து விழும் நிலையிலுள்ள ஓலைகள் மண்ணிறமாக ஆகி விடுகின்றன.
வேலிகளில் பனம் மட்டைகளின் பயன்பாடு... ஒவ்வொரு நிலையிலும் இவ்வோலைக்கு வெவ்வேறு பயன்கள் உள்ளன. குருத்தோலைகளை வெட்டிக் காய விட்டு அதனைப் பயன்படுத்திப் பல விதமான கைப்பணிப் பொருட்கள் செய்யப்படும். பச்சை ஓலைகள் மாடுகளுக்கு உணவாவதுடன், வேலியடைத்தல், கூரை வேய்தல், முறம் செய்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. மட்டைகளும், வேலியடைத்தல், குடிசைகள் அமைத்தல், பலவகை நார்களின் உற்பத்தி ஆகியவற்றில் உதவுகின்றன. காய்ந்து விழும் ஓலைகளும் பயிர்களுக்கு உரமாகின்றன
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu