வங்கிக்கடன் இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை: நிர்மலா சீத்தாராமன் பேச்சு
வங்கிகள் மத்திய அரசு திட்டங்களை ஏழைகளுக்கு கிடைக்க உறுதியேற்க வேண்டும், வங்கிக்கடன் இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை - மாநில வங்கியாளர் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் பேச்சு.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில், மாநில அளவிலான வங்கியாளர் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன், தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். முன்னதாக வங்கிக்கடன் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பயன்பெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பில் அவர்களின் தயாரிப்புகள் மற்றும் உற்பத்தி கண்காட்சியினை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் வங்கிகள், மத்திய அரசு திட்டங்களை எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக உருவாக்கி இருக்கிறார்கள் என வங்கியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், 662 மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூபாய் 16.64 கோடியும், 2862 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 102.61 கோடி கடன் தொகை என பல்வேறு 6681 பயனாளிகளுக்கு 195.46 கோடி கடனுதவிக்கான காசோலையை நிதியமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகள் சிரமம்ப்பட கூடாது என பாரத பிரதமர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததாகவும் குறிப்பாக சாலையோர வியாபாரிகளுக்குக்கான கடன் திட்டடம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர் வங்கிகளின் சேவைகளையும் பாராட்டினார். தொடர்ந்து பேசிய அவர்வங்கிகள் மத்திய அரசு திட்டங்களை ஏழைகளுக்கு கிடைக்க உறுதியேற்க வேண்டும், வங்கிக்கடன் இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu