காரியாபட்டி கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
காரியாபட்டி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற நவராத்ரி விழா.
காரியாபட்டியில் நவராத்திரி விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஸ்ரீ கல்யாண கணபதி ஸ்ரீ மாரியம்மன் கோவில் 16ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா தொடங்கப்பட்டது. முதல்நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன விழா தொடங்கியது.
அக். 15 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி விழாவில்,தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளது. 18 ந் தேதி இன்று செவ்வாய்க் கிழமை அம்மன் பால திரிபுரசுந்தரி அலங்காரத்தில் தொடர்ந்து, அம்மனுக்கு அன்னபூரணி கருமாரி மகாலட்சுமி ஆண்டாள் ரெங்க மன்னார். மகிஷா சுரமர்த்தினி ஞான சரஸ்வதி ஆகிய அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படும். நிகழ்ச்சியை ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக குழுவினர் செய்து வருகிறார்கள்.
காரியாபட்டி அதிமுக சார்பாக ஆண்டு விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றிய அதிமுக சார்பாக அதிமுகவின் 52 வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கதையாற்றிய பஸ் நிலையத்தின் எதிர்புறம் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், ஆண்டு விழாவை கொண்டாடும் விதத்தில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் கே .கே .சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, ராஜ், தோப்பூர் முருகன் , ஆவியூர் ரவி , பழனியப்பன், வழக்கறிஞர். ரமேஷ் , தோப்பூர் ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu