காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்

காரியாபட்டி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்
X

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நாட்டு நலப் பணித்திட்ட நிறைவு விழா நடை பெற்றது.

காரியாபட்டி அருகே. சித்தனேந்தல் கிராமத்தில் நாட்டு நலத்திட்டப் பணி நிறைவு விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நாட்டு நலப் பணித்திட்ட நிறைவு விழா நடை பெற்றது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ். மறைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி யின் நாட்டு நலபணித்திட்ட முகாம் 10 நாட்கள் சித்தனேந்தல் கிராமத்தில் நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெற்ற முகாமில், மாணவர்கள். மரம் வளர்ப்பு, போதை ஒழிப்பு , குழந்தை திருமணம் தடுத்தல், தேசிய ஒருமைப்பாடு பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பல்வேறு தூய்மை பணிகளில் ஈடுபட்டனர். முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராஜா தலைமை வகித்தார் .

என்.எஸ். எஸ். திட்ட அலுவலர் மாசிலாமணி வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான தங்க தமிழ் வாணன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். ஆத்மா திட்டத் தலைவர் கந்தசாமி, வழக்கறிஞர் செந்தில் குமார், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

Tags

Next Story
future jobs after ai