நமக்கு நாமே திட்டம்: துவக்கி வைத்தார் பேரூராட்சித் தலைவர்

நமக்கு நாமே திட்டம்: துவக்கி வைத்தார் பேரூராட்சித் தலைவர்
X

காரியப்பட்டி பேரூராட்சியில், நமக்கு நாமே திட்டத்தை, பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்.

காரியப்பட்டி பேரூராட்சியில், நமக்கு நாமே திட்டத்தை, பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சாலை மேம்பாடு, ஊரணி பராமரிப்பு, பள்ளிக்கூடம் கட்டிடம் பழுதுபார்த்தல் ,குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியோடு மக்களின் பங்களிப்பாக குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நமக்கு நாமே திட்டத்தை கொண்டு வந்தது.

பேரூராட்சியில் 10-வது வார்டில் சாலை வேலைக்கு 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், மக்கள் பங்களிப்பு தொகை 4 லட்சம், ராஜா என்பவர் பேரூராட்சி தலைவர் செந்திலிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செயல் அலுவலர் ரவிக்குமார் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!