காரியாபட்டியில் காலை உணவு திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர்கள்

காரியாபட்டியில் காலை உணவு திட்டத்தை தொடக்கி வைத்த அமைச்சர்கள்
X

விருதுநகர் மாவட்ட  பள்ளி ஒன்றில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன்,  தங்கம்தென்னரசு.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 699 அரசு தொடக்கப் பள்ளிகளில் 32,917 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் இன்று(25.08.2023) தொடங்கி வைத்தனர்.

பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய அமைச்சர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், கிராம, நகர்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகள் தூரமாக இருப்பதாலும், சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதை, கருத்தில் கொண்டும், அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற் காகவும், இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், ஊட்டசத்தினை உறுதி செய்வதற்காகவும், இந்திய நாட்டிலேயே முன்னோடி திட்டமான அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்”- கடந்த 15.09.2022 அன்று முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்;த 1,14,000 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத் தில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 69 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3884 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தினை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் 17 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர், நாகப்பட்டினம் மாவட்டத்தில், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தனர்.

அதனடிப்படையில், இன்று விருதுநகர் மாவட்டத்தில், மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல் ,ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை குறிக்கோளாக கொண்டு, ஊரகப் பகுதிகளில் 686 அரசு தொடக்கப்பள்ளிகளிலும், நகர்புறங்களில் 13 அரசு தொடக்கப் பள்ளி களிலும் என மொத்தம் 699 அரசு தொடக்கப்பள்ளிகளில் 32,917 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம், விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்;டம், இரண்டாம் கட்டம் என சேர்த்து 768 அரசு தொடக்கப்பள்ளிகளில் 36,028 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, மகளிர் திட்ட இயக்குநர் பேச்சியம்மாள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விசாலாட்சி, மாவட்ட ஊராட்சி செயலர் முருகன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்(பொ) சிவக்குமார், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பொ.சசிகலா, அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூர்யகுமாரி, காஜா மைதீன் பந்தே நவாஷ்,

வட்டாட்சியர் அறிவழகன், பாலவநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் அன்பு, பாலவந்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!