40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடவேண்டும்: அமைச்சர் தங்கம்தென்னரசு
திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசினார்.
விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் மல்லாங்கிணறு ராஜாமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து, பேசியதாவது:
விருதுநகர் வடக்கு மாவட்டத்தில், உள்ள வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அனைவரும் அயராது பாடுபட வேண்டும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அனைத்து திமுக சார்பு அணிகளும் சிறப்பாக கொண்டாடவேண்டும்.இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
இந்த கூட்டத்தில், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் வனராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி,ஒன்றிய செயலாளர்கள் பொன்னு தம்பி , கண்ணன், செல்லம், போஸ், சந்தன பாண்டியன், பேரூராட்சி தலைவர்கள் செந்தில், துளசிதாஸ், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன் பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu